தல அஜித்தின் வாலி படத்தில் கிக் ஏத்தும் கதாப்பாத்திரத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டுள்ளார் நடிகை மீனா.

Unknown Secrets of Vaali : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று வாலி.

தல அஜித்தின் படத்தில் கிக் ஏத்தும் கதாபாத்திரம், கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை - யார்? என்ன படம் தெரியுமா?

எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தல அஜித் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அஜித்துக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார். இந்த படத்தில் சிம்ரன் கிக் ஏத்தும் கதாபாத்திரத்தில் வேற லெவலில் நடித்திருந்தார்.

ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகை மீனா தான். இந்த வாய்ப்பு அவரை தேடி சென்றும் கால்ஷூட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போயுள்ளது.

நடிகை மீனா அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே, வில்லன் மற்றும் சிட்டிசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.