தொட்டி ஜெயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of ThottiJaya Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வி இசட் துரை இயக்கத்தில் வெளியான திரைப்படம் தொட்டி ஜெயா. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் இந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். ஒரே ஒரு பாடலுக்கு யுவன் இசையமைத்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் வெளியாகாதா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கோபிகா நடித்திருந்தார்.

ஆனால் முதலில் கோபிகாவுக்கு பதிலாக நயன்தாரா தான் நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.