தளபதி 66 கூட்டணி உருவாக யார் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Thalapathy 66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தளபதி 66 கூட்டணி உருவாக இந்த நடிகைதான் காரணம், முதல் முறையாக வெளியான தகவல்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமாக முடிவடைந்து விட்டது. படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

தளபதி 66 கூட்டணி உருவாக இந்த நடிகைதான் காரணம், முதல் முறையாக வெளியான தகவல்

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தின் கூட்டணி உருவாக கீர்த்தி சுரேஷ் தான் காரணம் என தெரியவந்துள்ளது. அதாவது, தில் ராஜூ விஜய் வைத்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என தனது ஆசையை கீர்த்தியிடம் சொல்ல கீர்த்தி விஜயிடம் பேசி அதன்பிறகு தான் இந்த கூட்டணி அமைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.