தலைவா படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Thalaivaa : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் வெளியான தலைவா படம் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்கிய ஏ எல் விஜய் தான் அந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தலைவா படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன தெரியுமா? இது இன்னும் மாஸா இருக்கே - வெளியான சூப்பர் தகவல்

அதாவது தலைவா திரைப்படத்திற்கு முதலில் தளபதி என டைட்டில் வைக்கலாம் என்று தான் ஆலோசனை கூறியுள்ளனர். அதன் பின்னர் இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்த போது அவர் கொடுத்த சில ஐடியாக்கள் காரணமாகத்தான் தலைவா ஒரு டைட்டிலை தேர்வு செய்ததாக ஏ எல் விஜய் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.