Unknown Secrets of Sillunu Oru Kadhal
Unknown Secrets of Sillunu Oru Kadhal

கிட்டத்தட்ட பத்து நடிகர்கள் நிராகரித்த கதையில் நடித்து செம ஹிட் கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா.

Unknown Secrets of Sillunu Oru Kadhal : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சூர்யா நடிப்பில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. அப்படி மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல்.

சூர்யா, ஜோதிகா, பூமிகா சாவ்லா, வடிவேலு என பலர் இணைந்து நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இன்று வரை இப்படம் கொண்டாடப்படும் திரைப்படமாக இருந்து வருகிறது.

“யாரையும் நம்பாதீங்க”.. 10 நிமிஷம்.. மூச்சே விடாமல் பேசி விட்டு.. கிச்சனுக்கு போய்.. தூக்கில் தொங்கிய நடிகை!

ஆனால் முதலில் இந்த படத்தின் கதையை கேட்ட சூர்யா வேண்டாம் என நிராகரித்துள்ளார். சூர்யா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் 10 நடிகர்கள் இந்த படத்தை நிராகரித்துள்ளனர்.

அதன் பின்னர் ஜோதிகா சூர்யாவிற்கு இந்த கதாபாத்திரம் நிச்சயம் செட்டாகும் என நம்பி சிபாரிசு செய்துள்ளார். ஜோதிகாவின் பேச்சைத் தட்டாமல் சூர்யாவும் நடித்துள்ளார். படமும் செம ஹிட்டாகியுள்ளது.

இதுவரை பலருக்கும் தெரியாத இந்த படத்தின் சீக்ரெட்டை தற்போது படத்தின் இயக்குனரான கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.