Unknown Secrets of Sethu Movie

சேது படத்தில் விக்ரமிற்கு பதில் முதலில் நடிக்க இருந்தவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Sethu Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சேது. பாலா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் விக்ரம் மீதான கண்ணோட்டத்தை மாற்றியமைத்தது. காரணம் இந்த படத்திற்கு முன்னதாக விக்ரமின் நடிப்பில் தொடர்ச்சியாக 7 படங்கள் வெளியாகி தோல்வியை மட்டுமே தழுவின.

கிளாமர் நாயகியாக வலம் வந்தார் அபிதாவையும் குடும்ப குத்து விளக்காக மாற்றியது சேது திரைப்படம் தான். ஆனால் முதலில் இந்தத் திரைப்படத்தில் நடிக்க இருந்தது பொங்கலோ பொங்கல் உள்ளிட்ட படங்களில் நடித்த விக்னேஷ் தான் என தெரியவந்துள்ளது.

இந்த படத்தின் கதையை கேட்ட ஆரம்பத்திலேயே அவருக்கு கதை பிடிக்கவில்லை என படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளார். அதன் பின்னர் இந்த வாய்ப்பு நடிகர் விக்ரமுக்கு கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.