பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் யார் என தெரிய வந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் பல நடிகர்களின் கூட்டணியில் படு பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவுக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல நடிகை.. வாய்ப்பு கைவிட்டுச் செல்ல காரணம் என்ன தெரியுமா??

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரங்களின் லுக் வெளியிடப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவுக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல நடிகை.. வாய்ப்பு கைவிட்டுச் செல்ல காரணம் என்ன தெரியுமா??

அந்த வகையில் சமீபத்தில் நடிகை திரிஷாவின் லுக் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் திரிஷாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது கீர்த்தி சுரேஷ் தான் என தெரியவந்துள்ளது. இந்த படத்திற்காக அணுகிய போது அவர் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. ‌