அஜித் நடிக்க வேண்டிய படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருவதாக தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். வலிமை படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் கூட்டணி அமைத்து போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார்.

அஜித் நடிக்க வேண்டிய படத்தில் நடிக்கும் சிம்பு.. பரபரப்பு தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர்.!!

இந்த நிலையில் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் ராஜா தனது தயாரிப்பில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் 10 தல திரைப்படம் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

கன்னட படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் சிம்பு வில்லன் வேடம் ஏற்று நடித்து வருகிறார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் அஜீத் நடிக்க வைக்கத்தான் திட்டமிட்டு இருந்தோம் என ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பின்னர் சில காரணங்களால் இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க முடியாமல் அதற்கு பதிலாக நடிகர் சிம்புவை ஒப்பந்தம் செய்தோம் என தெரிவித்துள்ளார்.

அஜித் நடிக்க வேண்டிய படத்தில் நடிக்கும் சிம்பு.. பரபரப்பு தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர்.!!

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிய இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது‌.