பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியாக நடித்து வரும் ஸ்டாலின் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Unknown Secrets of Pandian Stores Moorthy : தமிழ் சின்னத்திரையில் தெற்கத்தி பொண்ணு என்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர் ஸ்டாலின் முத்து. இந்த சீரியலை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை என பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

உண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி யார் தெரியுமா?? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே - ரசிகர்களை வாயடைக்க வைத்த தகவல்
நீட் தேர்வு முடிவு : முதலிடம் பிடித்த மாணவன்-மாணவி..

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி குறித்த பலருக்கும் தெரியாத தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இவருடைய அப்பா ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். அவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் இமயம் பாரதி ராஜாவின் உடன் பிறந்த சகோதரர் தான் என தெரிய வந்துள்ளது. ஆம் பாரதிராஜாவின் அண்ணன் மகன்தான் இந்த ஸ்டாலின் முத்து. பாரதிராஜா இயக்கிய தெற்கத்தி பொண்ணு என்ற சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் சினிமா மீது கொண்ட பற்றினால் தொடர்ந்து பல்வேறு தடைகளையும் சோதனைகளையும் தாண்டி இன்று தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigil & Kaithi பட மோதல் குறித்து மேடையில் பேசிய இசையமைப்பாளர் Sam C.S | Enemy Press Meet