இறந்தது போல நடித்த பிறகு லட்சுமி அம்மாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் என்ன செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

Unknown Secrets of Pandian Stores : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷீலா. கடந்த வாரத்திற்கு முன்பு இவர் உயிர் இழந்தது போன்ற காட்சிகள் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பானது. ஒருவர் உயிரிழந்து விட்டால் அவரை அடக்கம் செய்வதற்கு முன்பாக என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அத்தனையும் இந்த சீரியலில் ஒளிபரப்பு செய்தனர். அவை அத்தனை காட்சிகளிலும் ஷீலா எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ராகு, கேது மற்றும் சனி தோஷம் விலக வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்..

இறந்தது போல நடித்த பிறகு லட்சுமி அம்மாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் என்ன செய்துள்ளார்கள் பாருங்க - வைரலாகும் புகைப்படம்.!!

மேலும் அவரை பாடையில் வைத்து முழுவதும் தூக்கி செல்ல முடியாது என்பதற்காக அவருக்காக ஒரு டம்மியை உருவாக்கி உள்ளனர். அதுகுறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வெளியிட்டுள்ள யூடியூப் வீடியோவில் கூறியுள்ளார். முதல் பதிவாக இது போன்ற இழந்தது போன்ற காட்சிகளில் நடித்தால் காட்சி முடிந்து நடித்து முடித்த பிறகு அவர் சிரித்த முகத்துடன் எதிரில் இருக்க வேண்டும் என்பதுதான் சம்பிரதாயம் என தெரிவித்துள்ளார்.

Seafarer Ashwin Surprise His Wife Deepa Vani | Flash Mob | First Time In Chennai | Velavan Stores

மேலும் பாடையில் படுப்பது போன்ற காட்சிகளில் நடித்த பிறகு பூசணிக்காய், தேங்காய் மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவற்றை கொண்டு த்ரிஷ்டி எடுத்த பிறகு தான் வீட்டுக்கு அனுப்புவார்கள் என தெரிவித்துள்ளார். லட்சுமி அம்மாவிற்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் த்ரிஷ்டி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.