நண்பன் படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Nanban : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து இருந்த ஒரே திரைப்படம் நண்பன். இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற த்ரீ இடியட்ஸ் படத்தின் ரீமேக் தான் இப்படம் என்பது அனைவரும் அறிந்ததே.

நண்பன் படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்க இருந்தது யார் தெரியுமா? முதல் முறையாக வெளியான தகவல்.!!

இந்த படத்தில் தளபதி விஜயுடன் ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யன், சத்யராஜ், இலியானா என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் சத்யராஜ் நடித்த இருந்த சைலன்சர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது மலையாள நடிகர் திலீப் தான் என தெரியவந்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் திலிப்பை நடிக்க வைக்க தான் முயற்சி செய்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அது கைகூடாமல் போக சத்யராஜ் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.