அஜித்துடன் ஒரு படத்தில் நடித்த நடிகை மீனா விஜயுடன் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காதது ஏன் என தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Meena Carrier : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அஜித்துடன் 3 படத்தில் நடித்த மீனா விஜயுடன் நடிக்காதது ஏன் தெரியுமா?? தீயாகப் பரவும் தகவல்

இவர் தல அஜித்துடன் இணைந்து சிட்டிசன், ஆனந்த பூங்காற்றே மற்றும் வில்லன் என மூன்று படங்களில் நடித்திருந்தார். ஆனால் தளபதி விஜயுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தான் நடனமாடினார். இதனால் அஜித்துடன் 3 படத்தில் நடித்த மீனா ஏன் விஜய்யுடன் நடிக்க வல்லை என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது.

ஆனால் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிரியமுடன் பிரான்ஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மீனாவை தேடி சென்றுள்ளது. அப்போது வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.