அண்ணாத்த படத்துடன் மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு மோதுவது குறித்த ரகசியம் தெரிய வந்துள்ளது.

Unknown Secrets of Maanaadu Release : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

அண்ணாத்த படத்துடன் மோதுவது ஏன்?? பக்கா ஸ்கெட்ச் போட்டு களமிறங்கும் மாநாடு படக்குழு.!!
சோமவார தினத்தில், சந்திரனுக்கு சிவன் தந்த அடைக்கலம்.!

மாநாடு படம் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே தீபாவளி தினத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது ஏன் என்பது தெரியவந்துள்ளது.

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்! – Actor Ponnambalam Speech | UOMS Nanbargal

அண்ணாத்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திலும் திமுகவிற்கு மிக நெருக்கம் என்பதால் எப்படியும் தீபாவளிக்கு முன்பாகவே 100% இருக்கைக்கு திரையரங்குகளில் அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாடு படத்திற்கும் நிறைய திரையரங்குகள் கிடைக்கும் என்பதன் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் 100% இருக்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் அண்ணாத்த ரிலீஸ் தள்ளிப் போகும் எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி படம் தள்ளிப் போனாலும் சோலோவாக மாநாடு வெளியாகும் என படக்குழு திட்டம் போட்டுள்ளது. இரண்டில் எது நடந்தாலும் நமக்கு லாபம் என்பதன் காரணத்தினாலே மாநாடு படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.