நடிகையுடன் லிப் லாக் காட்சி குறித்து சிம்பு சொன்ன வார்த்தை பற்றி பேசியுள்ளார் கௌதம் மேனன்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு படங்களை தொடர்ந்து சிம்புவுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார் கௌதம் மேனன்.

நடிகையுடன் லிப் லாக் காட்சி.. சிம்பு சொன்ன வார்த்தை - வெந்து தணிந்தது காடு ரகசியத்தை உடைத்த கௌதம் மேனன்

ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது இந்த திரைப்படம். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இதானி நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற உன்னை நினைச்சதும் பாடலில் ஒரு லிப் லாக் காட்சியை வைத்துள்ளார் கௌதம் மேனன்.

நடிகையுடன் லிப் லாக் காட்சி.. சிம்பு சொன்ன வார்த்தை - வெந்து தணிந்தது காடு ரகசியத்தை உடைத்த கௌதம் மேனன்

ஆனால் நடிகர் சிம்பு முத்த காட்சி வேண்டாம் என சொன்னதும் அந்த காட்சியை பின்புறத்தில் இருந்து படமாக்கியதாக இயக்குனர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ரொமான்டிக் காட்சிகளில் பின்னி பெடலெடுக்கும் சிம்புவா இப்படி சொன்னார் என பலரும் ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.