Unknown Secrets of Karnan

கர்ணன் படம் பற்றி பலருக்கும் தெரியாத உண்மை ஒன்று வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Karnan : தமிழ் சினிமாவின் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்தை தொடர்ந்து இவர் தனுஷை வைத்து இயக்கிய கர்ணன் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் ஆக உள்ளது. உண்மையில் மாரி செல்வதால் பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயனின் சந்தித்து இவர் ஒரு கதையைக் கூற சில படங்கள் முடித்து விட்டு வருகிறேன் என கூறியுள்ளார்.

இந்த இடைவெளியை தான் நடிகர் தனுஷ் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் சில படங்களில் நடித்து விட்டு வருகிறேன் எனக் கூறியதால் தான் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கண்ணன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.