Unknown Secrets of Jodi Movie

பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி என்ற படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுளளது.

Unknown Secrets of Jodi Movie : தமிழ் சினிமாவில் 90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் பிரசாந்த். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு கொடுக்கும் நடிகராக வலம் வந்தார். இவரது நடிப்பில் வெளியான படங்களும் பாடல்களும் தொடர்ந்து ஹிட் அடித்தன.

இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று ஜோடி. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான பாடல்களும் பட்டையைக் கிளப்பின. இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

ஆனால் முதன்முதலாக இப்படத்தின் சிம்ரனுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க இருந்தார். அவர் அப்போது ஒரு இந்தி படத்தில் பிசியாக நடித்து வந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் பார்க்க இந்த வாய்ப்பு சிம்ரனுக்கு சென்றது.