ஜெய் பீம் படத்தில் முதலில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Jaibhim Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாக உள்ளது.

கோலி, ஆபத்தானவராக மாறுவார் : காம்பீர் கருத்து

இதற்கு முன்னதாக சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் சூர்யா வக்கீலாக அசத்தலான நடிப்பை கொடுத்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

நல்ல கதையோடு தான் Tamilcinema-விற்கு வர ஆசைப்பட்டேன் – Exclusive interview with Allu Arjun | Pushpa

ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது சூர்யா இல்லை. படத்தை சிறிய பட்ஜெட்டில் எடுக்கத்தான் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதியை சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என ஆலோசித்தனர். ஆனால் கடைசியில் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து இந்த படத்தில் சூர்யா நடித்ததாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் விஜய் சேதுபதி நல்ல நடிப்பை கொடுத்திருப்பார் அதில் சந்தேகமில்லை, ஆனால் ஜெய்பீம் திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பை பீட் செய்திருப்பாரா என்பது சந்தேகம் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.