இருமுகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Unknown Secrets of Irumugan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இருமுகன். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

இருமுகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? முதல் முறையாக வெளியான ரகசியம்

விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் முதலில் இவர்களுக்கு பதிலாக வேறு இரண்டு நடிகைகள் தான் நடிக்க இருந்துள்ளனர்.

அதாவது நயன்தாராவுக்கு பதிலாக காஜல் அகர்வாலும் நித்யா மேனனுக்கு பதிலாக ப்ரியா ஆனந்த்தும் நடிக்க இருந்துள்ளனர். தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நாயகிகள் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.