Unknown Secrets of Gentle Man Movie

சூப்பர் ஹிட்டடித்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Gentle Man Movie : சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இவரது நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜென்டில்மேன்.

இந்த திரைப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை மதுபாலா நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சக்கை போடு போட்டது.

ஆனால் முதலில் இந்தப் படத்தில் நடிக்க இருந்தது அர்ஜுன் இல்லை. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான் இந்த படத்தில் நடிக்க இருந்துள்ளார்.

இந்த படத்தின் கதையை கேட்டபோது அவர் இயக்குனர் குரு பவித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்திற்காக மீசை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.

தற்போதுவரை ஜென்டில்மேன் படத்தை தவற விட்டதற்காக சரத்குமார் வருத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.