Unknown Secrets of Billa Movie

பில்லா படத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா இல்லை அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை தான் நடிக்க இருப்பதக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Unknown Secrets of Billa Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று பில்லா. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஆக்ஷன் நாயகியாக நயன்தாரா நடித்து இருப்பார். நயன்தாராவின் நடிப்பு இந்தப் படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. அதே சமயம் அளவில்லாத கவர்ச்சியிலும் நடித்திருந்தார்.

ஆனால் இந்த படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது நயன்தாரா இல்லை, பாலிவுட் நடிகையான இஷா கோபிகர் தான் நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்சனை மற்றும் சில கருத்து காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ள நயன்தாரா இப்படத்தில் ஒப்பந்தமானார் என படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.