முதன்முதலில் பாரதிகண்ணம்மா சீரியல் நாயகியாக நடிக்க இருந்தது யார் எனத் தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Bharathi Kannamma Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அருண் பிரசாத் என்பவர் பாரதி கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக வினுஷா தேவி என்பவர் கண்ணம்மா வேடத்தில் நடித்து வருகிறார்.

வினுஷா தேவிக்கு முன்பாக கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் ரோஷ்நி ஹரிப்ரியன். ஆனால் உண்மையில் முதன் முதலாக இந்த சீரியலில் நடிக்க இருந்தது ரோஷினி கூட கிடையாதாம்.

அவருக்கு முன்னதாக ஆடிஷனில் பவித்ரா ரெட்டி என்பவர் தான் இந்த சீரியலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். சில காரணங்களால் அவரால் இந்த சீரியலில் நடிக்க முடியாமல் போகவே இந்த வாய்ப்பு ரோஷினிக்கு சென்றுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.