கடைசி நேரத்தில் ஓவியா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொண்ட நிலையில் அவருக்கு பதிலாக வேறொருவர் களமிறங்க உள்ளார்.

Unknown Secrets of BB Ultimate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 5 சீசன் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவும் பங்கேற்க இருப்பதாக ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் உடல் நலக் குறைபாடு காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் விலகி கொண்டுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக பிக் பாஸ் சீசன் 1-ல் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான சுஜா வருணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.