ஷாலினியை திருமணம் செய்து வைக்குமாறு என் கேட்டேன் அவரது வீட்டிற்கு அஜித் சொந்த ஷாலினியின் அப்பா முடியாது என மறுத்துள்ளார்.

Unknown Secrets of Ajith Marriage : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அஜித் மற்றும் ஷாலினி திருமணம் எப்படி நடைபெற்றது என்பது குறித்த சுவாரஸ்யத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தல அஜித் அமர்க்களம் என்ற படத்தில் நடித்த போது நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்தார். அப்போது இவர்களுக்கு இடையே மலர்ந்தது காதல். இருவரும் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த காலகட்டம் அது.

ஷாலினி மீது கொண்ட அதீத காதலால் அவரை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் தல அஜித். மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் தனக்கு வருமானம் வராது என்ற காரணத்தினால் அஜித்திற்கு பெண் தர மறுத்துள்ளார் ஷாலினியின் அப்பா.

இதனையடுத்து தல அஜித் ஒரு பெரிய தொகையை மாமனாரிடம் கொடுத்துவிட்டு ஷாலினியை மணந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வரை தல அஜித் ஷாலினி மீது மிகுந்த பாசத்துடன் இருந்து வருகிறார். காதலித்து வந்த போது ஷாலினிக்கு ஏதாவது ஒன்று என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகுந்த கோபம் அடைந்து விடுவார் அஜித் என அப்போது பத்திரிகைகளில் பரவலாக எழுதப்பட்டு வந்தது.

தற்போதும் கூட பலரும் வாழ்ந்தால் அஜித் ஷாலினி மாதிரி வாழ வேண்டும் என கூறுவதை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதுதான் என்பது மறுக்க முடியாத உண்மை.