ஐயா படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Aiyaa Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். இவரது நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஐயா.

ஐயா பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை.. நயன்தாராவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா??

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நயன்தாரா. பல்வேறு படங்களில் நடித்த இவருக்கு இதுதான் அறிமுக திரைப்படம்.

ஆனால் முதலில் இந்த திரைப்படத்தில் நடிக்க இருந்தது நயன்தாரா இல்லை. அப்போது பிரபல நடிகையாக வலம் வந்த நவ்யா நாயர் தான். இவர் அப்போதைய சமயத்தில் பல மலையாள படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தினை நிராகரித்துள்ளார். இதனை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.