Unknown Secret of Mankatha
Unknown Secret of Mankatha

மங்காத்தா படத்தின் மாசான பைக் ரேஸ் சீனில் தல அஜித் நடிக்கவில்லை என பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

Unknown Secret of Mankatha : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று மங்காத்தா. இந்த படத்தை வெங்கட் பரபு இயக்கி இருந்தார்.

இப்படத்தில் அஜித் நெகட்டிவ் ஷேடோ கலந்த ரோலில் நடித்திருந்தார். மேலும் அர்ஜுன், வைபவ், மகத், பிரேம்ஜி மற்றும் பலர் இணைந்து நடித்து இருந்தனர்.

இப்படத்தில் பைக், கார் ரேஸ் சீன்கள் செம மாஸாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த பைக் ரேஸ் சீன் தல அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்தது.

மங்காத்தா படத்தில் நடிக்க இருந்தது அஜித் இல்ல, நான் தான் மைக்கை பிடித்து புலம்பிய பிரபல நடிகர்.!

ஆனால் உண்மையில் இந்த காட்சியில் அஜித்தும் வைபவும் நடிக்கவில்லை. டூப் போட்டு தான் இந்த காட்சியை படமாக்கினார்கள் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அவர் இந்த காட்சியை குறித்து படத்தின் புரமோஷனுக்காக நடிகர் வைபவ் பொய் சொல்லி விட்டார் எனவும் குற்றம் சாட்டினார்.

இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் கோபம் கொண்டுள்ளனர். உண்மையில் என்ன நடந்தது என்பதை இயக்குனர் வெங்கட்பிரபு தான் தெரிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ரசிகர்கள் அனைவரும் மங்காத்தா-2 எப்போது உருவாகும் என கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.