Unknown Secret of Kaakha Kaakha
Unknown Secret of Kaakha Kaakha

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான காக்க காக்க திரைப் படத்திற்கு முதலில் வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

Unknown Secret of Kaakha Kaakha : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று திரைப்படம் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மீண்டும் நடிக்க வரும் கவர்ச்சி நாயகி – அதுவும் என்ன ரோல் தெரியுமா?

இந்த நிலையில் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த காக்க காக்க படம் பற்றிய பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று தெரிய வந்துள்ளது.

அதாவது காக்க காக்க திரைப்படத்திற்கு முதலில் பின்குறிப்பு என்று தான் டைட்டில் வைத்துள்ளனர். அதன் பின்னர் தான் இந்த டைட்டில் காக்க காக்க என மாற்றம் பெற்றுள்ளது.

இது குறித்த போஸ்டர் ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.