Unite for Mudhalvan 2 : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Thalapathy Vijay

Unite for Mudhalvan 2 :

இப்படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தாணு தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறதாம்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர். இவரின் ஐந்தாவது படமாக வெளியானது முதல்வன்.

ரஜினிக்காக எழுதிய கதையை சிறு மாற்றங்கள் செய்து அர்ஜுனை வைத்து இயக்கினார். ஜென்டில்மேன், இந்தியன் பாணியில் உருவான ‘முதல்வன்’, இன்றுவரை ஷங்கரின் மிகச்சிறந்த படைப்பாக பார்க்கப்படுகிறது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ‘முதல்வன்’ படத்தின் திரைக்கதை, ஒரு நல்ல கமர்ஷியல் சினிமாவுக்கான சிறந்த திரைக்கதைக்கு உதாரணமாக இன்றுவரை திரைப்பட கல்லூரிகளில் மேற்கோள் காட்டப்படுகிறது.

ரஜினியோட சேர்ந்து இத செஞ்சாலே போதும் – வெளிப்படையாக சொன்ன தனுஷ்!

குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் டிராபிக்ஜாம் காட்சியும், இன்டர்வியூ காட்சியும், இடைவெளிக்கு முன்பு வரும் ஒருநாள் முதல்வர் காட்சிகளும் ஒரு சீக்குவென்ஸ் எப்படி தொய்வில்லாமல் எழுதி, எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாய் அமைந்திருக்கும்.

இப்படிப்பட்ட படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என பலரும் காத்திருக்கின்றனர். இதில் விஜய் நடிக்கவேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

ஷங்கர் விரும்பிய இந்தியன் 2 இன்னும் தொடங்காமல் இருக்கும் நிலையில் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவர் விரும்புகிறாராம்.

இதுகுறித்து விஜய்யிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அதனால் ரசிகர்களின் இந்த ஆசை நிறைவேற நிறையவே வாய்ப்பிருக்கிறது.

மேலும் இப்படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தாணு தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறதாம். இப்படி இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் இணைவதால் இப்படத்தில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.