YouTube video

Unemployment Rate in Tamilnadu State : தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை தமிழகத்தில் கூட 4.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் துரிதமான நடவடிக்கைகளால் 67,200 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கப்பலூர் வேளாண்மை வாணிபக் கழகத்தில் உள்ள நெல்கொள்முதல் கிடங்குகளை ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு வழியா ராஜஸ்தானில் நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இதுவரை 47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு 30,500 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் 67,200 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டது என எதிர்க்கட்சிகள் ஆளும் அதிமுக மீது அரசியல் ஆதாயத்திற்காக பொய்க் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. தமிழகத்தில் கடந்த பிப்ரவரியில் 8.3 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை தற்போது 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பினை அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.