Unemployment Rate in Tamil Nadu
Unemployment Rate in Tamil Nadu

இந்தியா முழுவதும் வேலையின்மைசதவீதம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அதற்கு நேர்மாறாக உள்ளது.

Unemployment Rate in Tamil Nadu : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது.

கொரானா வைரஸ் அதி தீவிரமாக பரவி வரும் இந்த பேரிடர் காலத்திலும் தமிழக அரசு சாதுர்யமாக செயல்பட்டு மக்களை பாதுகாத்து வருகிறது.

வைரஸ் பரவலை கட்டுபடுத்தவும் பாதிக்கப்பட்டவர்கள் அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து வெகு விரைவில் குணமடையவும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேசமயம் தமிழகத்தின் பொருளாதாரம் சரிந்து விடாமல் இருக்க இந்த பேரிடர் காலத்திலும் 35,500 கோடி முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

மேலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தகவல்களை தெரியப்படுத்தவும் தனியாக ஒரு இணைய தளத்தை வடிவமைத்துள்ளது.

அதிமுகவின் வடதமிழக ஐடி விங் செகரெட்டரி கோவை சத்தியன் அவர்கள் தமிழகத்தின் தற்போதைய வேலைவாய்ப்பின்மை குறித்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில் வேலைவாய்ப்பின்மை, 2019 டிசம்பரில் தமிழகத்தில் 5.7% ஆக இருந்த நிலையில் இது 2020 ஏப்ரல் மாதத்தில் 49.8% ஆனது. இதனையடுத்து 2020 ஜுலை மாதத்தில் 8.1% குறைந்துள்ளது. கொரோனா காலத்திலும் 30,500 கோடி முதலீடு ஈர்த்து வேலை வாய்ப்பினை உறுதி செய்துள்ளது அம்மாவின் அரசு என தெரிவித்துள்ளார்.

இந்த கொரானா பேரிடர் காலத்தில் நாடு முழுவதும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் வேலை வாய்ப்பின்மை குறைந்து இருப்பதற்கான காரணம் தமிழக அரசு எடுத்த தக்க நடவடிக்கைகள் தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.