Un Kadhal Irunthal

Un Kadhal Irunthaal Audio Launch :

லெனா (நடிகை)

ஹாசிம் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக இருந்தது. நான்கு வித்தியாசமான பாத்திரமாக இருக்கும்.

அதிலும் புகைபிடிக்கும் காட்சிகள் கடினமாக இருந்தது. இருப்பினும், என்னுடைய கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

நான் தற்போது விக்ரமுடன் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கி றேன்.

மபுள் சல்மான் (மற்றொரு கதாநாயகன்)

தமிழ் கொஞ்சம் தான் தெரியும். மலையாளத்தில் 15 படங்கள் நடித்திருக்கிறேன். தமிழ் படங்கள் நிறைய பார்ப்பேன்.

எனக்கும் என் பெரியப்பா மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் மாதிரி தமிழ் படத்தில் நடிக்க ஆவலாக இருந்தேன்.

அப்போது தான் ஆசிப் இந்த வாய்ப்பை கொடுத்தார். தமிழில் முதல் படம். எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

சந்திரிகா (கதாநாயகி)

இது எனக்கு மூன்றாவது படம். ஆனால் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். இருட்டு அறையில் முரட்டு குத்து மாதிரியான கதாபாத்திரம் அல்ல.

காயத்ரி (நடிகை)

நல்ல கதாபாத்திரத்தில் நடித்ததற்கு மகிழ்ச்சி. ரியாஸ்கானும், மபுலும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். ஸ்ரீகாந்துடன் நடிக்க வாய்ப்பு அமையவில்லை.

மிதுன்

இந்த வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது.

ஹாசிம் மரிக்கர் (இயக்குநர்)

அபிராமி ராமநாதன் அவர்களின் பேட்டியை பார்த்தேன். ஒரு படம் நன்றாக ஓடுவதற்கு கதை தான் தேவை என்று சொன்னார்.

இப்படத்தில் அது இருக்கும். இப்படத்தின் பெயர் தான் காதல் சம்பந்தப்படுத்தி இருக்கும். ஆனால் படத்தில் காதல் பற்றி ஒன்றும் இருக்காது.

உச்சபட்ச த்ரில்லர் படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரே ஒரு கதாநாயகன் தான். அது ரியாஸ்கான் மட்டும் தான். அவரை தவிர மற்ற அனைவரும் வில்லன்கள் தான்.

இப்படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது. படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். புதுமையான முயற்சிகளை கையாண்டிருக்கிறோம்.

எல்லோரும் கேட்கலாம் ஏன் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தீர்கள் என்று. ஏனென்றால், தமிழ் படங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த மேடையிலேயே எனது அடுத்த படத்தின் பெயரையும் அறிவிக்க இருக்கிறேன்.

நடிகர் ரியாஸ்கான்

நாம் எல்லோரும் ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் என்று சொல்வது இயற்கை தான். அதேபோல் தான் நானும் இதுவரை 300 படங்கள் நடித்திருக்கிறேன்.

அதில் 150 படங்கள் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். ஆனாலும், இந்த படத்தில் உண்மையாகவே வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். என் மேல் நம்பிக்கை வைத்து இக்கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி.

சினிமாவிற்கென்று ஒரு விதிமுறை எப்போதும் உண்டு. ஒருவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால், அடுத்த படத்திலும் அதே கதாபாத்திரம் தான் கொடுப்பார்கள். ஆனால், நாம் தான் விடாமுயற்சியால் மாற்றியமைக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய முழு திறமையும் வெளிவரும்.

ஆகையால், இப்படமும் சரி, என்னுடைய கதாபாத்திரமும் சரி நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

என்னைப் போலவே இப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கதாபாத்திரமும், வித்தியாசமான அனுபவமும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். லெனாவிற்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீகாந்த் (கதாநாயகன்)

இந்த படத்தில் இறுதியாக தான் வந்து சேர்ந்தேன். ஹாசிம் எனக்கு நல்ல நண்பர். என்னிடம் கதை கூறியதுமே நீங்கள் என்ன கூறினீர்களோ படத்திலும் அப்படியே வந்தால் நன்றாக இருக்கும் என்றேன்.

மிகப்பெரிய தயாரிப்பாளர் குடும்பத்தில் இருந்து வந்தவர். பெரிய படங்களை கொடுத்த நிறுவனம். இவரும் தயாரிப்பில் தான் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இயக்குநராக வந்துவிட்டார்.

மலையாளத்தில் தான் இப்படத்தை எடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் இயக்கியிருக்கிறார். நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இப்படம் சைகாலாஜிக்கல் திரில்லர் படம். திரைக்கதையில் நிறைய சவால்கள் இருக்கிறது. அதை திறமையாக கையாண்டிருக்கிறார்.

ஆனால் நான் நடித்த பாடல் இப்படத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும். லெனா மிகச்சிறந்த நடிகை. பிற மொழிகளில் அவர் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன்.

தமிழில் அனேகனுக்கு பிறகு ஏன் நிறைய படங்கள் நடிக்கவில்லை என்ற எண்ணம் இருந்தது. சிறந்த நடிகரான விக்ரமுடன் இணைந்து நடிக்கப் போகிறார் என்பதை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழில் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். எல்லோரிடமும் கற்றுக் கொள்ள ஏதோவொன்று இருக்கும். அதுபோல் லெனாவிடமும் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

இப்படத்தில் எல்லோரிடமும் பணியாற்றியது மகிழ்ச்சி. மன்சூர் நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அவருடைய முதல் ஆல்பம் ஆன்லைனில் பிரபலமானது. அவர் நல்ல பாடகரும் கூட.

ரியாஸ் இன்னும் உடலை நன்றாக வைத்திருக்கிறார். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்சூர் அஹமது (இசையமைப்பாளர்)

சினிமாவிற்கு மலையாளம், தமிழ், ஹிந்தியென்றோ மொழி ஒன்றும் பேதமில்லை. இப்படத்தின் கதையை புரிந்து கொண்டு அதற்கேற்ப இசை அமைத்திருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்து ஹாசிம் மரிகருக்கு நன்றி.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.