Ulutham Lentil Sapathi Recipe
Ulutham Lentil Sapathi Recipe

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்,
கடுகு – சிறிதளவு,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப,
பூரணத்திற்கு:
உளுத்தம் பருப்பு – கால் கப்
காய்ந்த மிளகாய் – 2
சோம்பு – கால் டீஸ்பூன்

செய்முறை :

1) கோதுமை மாவை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

2) உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து சோம்பு, உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

3) இந்த விழுதை, ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். பிறகு உளுத்தம் பருப்பு பூரணத்தை ஆற வைக்கவும்.

4) கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு பூரணத்தை சேர்த்து கிளறவும். பின் பிசைந்த மாவினை உருட்டி அதனுள் உளுத்தம் பருப்பு பூரணத்தை வைத்து சப்பாத்திகளாக தேய்த்து தோசை தவாவில் சுட்டு எடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here