udit surya
சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவகல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது.

Udit surya confession twenty lakh bribe for forgery – நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இந்த வழக்கை காவல் துறையினர் விசாரித்தனர். அதன்பின் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே உதித் சூர்யா கல்லூரிக்கும் செல்லவில்லை. மேலும், குடும்பத்துடன் அவர் தலைமறைவானார்.

விஜய்க்கு ஹிட்டாகனும்.. ஆனா ஃப்ளாப் ஆகனும்.. விஜய் ரசிகரின் பேட்டி (வீடியோ)

இதற்கிடையே, தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உதித் சூர்யா தரப்பில் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவர் இந்த வார இறுதியில் சிபிசிஐடி போலீசாரிடம் சரண் அடையலாம். அப்படி செய்தால் இந்த முன் ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக மாற்றி விசாரிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.இதையடுத்து திருப்பதியில் இருந்த உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், தன் மகனுக்கு பதிலாக வேறு ஒருவர் நீட் தேர்வை எழுதுவதற்காக உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசன் கேரளாவை சேர்ந்த ஒரு இடைத்தரகரிடம் ரூ.20 லட்சம் லஞ்சமாக கொடுத்ததை போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். எனவே, இதில் பலரும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.