உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்திற்கான தலைப்பை அப்பாடாக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பு சமீபத்தில் வெளியான ‘நெஞ்சுக்குள் நீதி’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாறி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதில் முக்கிய கதாபாத்திரங்களாக வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினின் புதிய திரைப்படம் - மாசான தலைப்புடன் வெளியான சூப்பர் தகவல்.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் மாமன்னன் என்ற டைட்டில் ரோலில் வடிவேலு நடித்துள்ளதாகவும் அவருக்கு மகனாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினின் புதிய திரைப்படம் - மாசான தலைப்புடன் வெளியான சூப்பர் தகவல்.

இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினின் அடுத்த புதிய படத்திற்கான தலைப்பு வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியான நிலையில் தற்போது படத்திற்கான தலைப்பினை பட குழு வெளியிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் புதிய திரைப்படம் - மாசான தலைப்புடன் வெளியான சூப்பர் தகவல்.

அப்படத்திற்கு “கலகத் தலைவன்” என்ற மாஸ் ஆன தலைப்பினை பட குழு வைத்திருப்பதை மோஷன் போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அப்போஸ்டறை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினின் புதிய திரைப்படம் - மாசான தலைப்புடன் வெளியான சூப்பர் தகவல்.