Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin – பட்டுக்கோட்டை: தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி சென்னை, பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பள்ளி திடலில் விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் நிகழச்சி நடைபெற்றது.

பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பள்ளி திடலில், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி , கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு “பசுமை சைதை” திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் தென்னங்கன்றுகளை வழங்கினார்.

மேலும் விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ‘கஜா புயலால், 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 4 முறை வந்து பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்’ இவ்வாறு கூறினார்.

மேலும் பேசுகையில், தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் செய்ய வேண்டிய வேலையை செய்கிறார்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும் சரி, மேகதாது அணை பிரச்சினையாக இருந்தாலும் சரி, நமது தலைவர்தான் முன்னிருந்து செய்கிறார் என்று பெருமையாக திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டினர்.

மேலும், ‘திமுக தலைவர் ஸ்டாலின், விரைவில் முதலமைச்சராகப் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவார்’ இவ்வாறு பேசினார்.

மேலும், கஜா புயலால் தென்னை மரங்கள் சேதம் அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட திட்டக்குடியை சேர்ந்த கலைவாணன் என்பவரின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ.50 ஆயிரம் நிதியை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.