Udhayanidhi Stalin With Son

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Udhayanidhi Stalin With Son : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் திமுக தலைவர் ஸ்டாலினின் ஒரே மகன். திமுக இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார் உதயநிதி.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டுள்ளார். மேலும் தற்போது இவர் ஆர்டிகல் 15 தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் நேற்றுதான் உதயநிதி கலந்து கொண்டார். படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பாக மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு படக்குழு அஞ்சலி செலுத்தியது.

தற்போது உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய மகன் இன்பநிதியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தற்போது இன்பநிதிக்கு 17 வயது ஆகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இவரும் அரசியலுக்கு வந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.