வாரிசு படத்தையும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரசிகர்கள் வாரிசு. வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். எஸ் தமன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஞ்சிதமே பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தையும் விட்டு வைக்காத உதயநிதி.. இந்த ஏரியா எல்லாம் ரெட் ஜெயன்ட் ரிலீஸ் தான் - லிஸ்ட் இதோ.!!

வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் வாரிசு படத்தின் சில ஏரியாக்களின் உரிமையையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாரிசு படத்தையும் விட்டு வைக்காத உதயநிதி.. இந்த ஏரியா எல்லாம் ரெட் ஜெயன்ட் ரிலீஸ் தான் - லிஸ்ட் இதோ.!!

சென்னை சிட்டி, செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட ஏரியாக்களில் வாரிசு படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது என வினியோகிஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.