பீஸ்ட் படத்தை காட்டிலும் கேஜிஎப் 2 படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Udhayanidhi Stalin About KGF2 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பீஸ்ட் திரைப்படம் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக 10 நாளில் பல இடங்களில் பீஸ்ட் திரைப்படம் தூக்கப்பட்டு இதனோடு வெளியான கேஜிஎப் திரைப்படத்தை திரையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தெலுங்குத் திரைப்படங்கள் தற்போது பான் இந்தியா படங்களாக வெளியாகின்றன. தமிழ் படங்களை தமிழ் மக்கள் ஓட வைக்கிறார்களோ இல்லையோ நல்ல படங்களை ஓட வைக்கிறார்கள்.

நான் எந்த தமிழ் படத்தையும் குறை சொல்லவில்லை என்று கூறியுள்ளார். அதாவது உதயநிதி ஸ்டாலின் பீஸ்ட் படத்தை காட்டிலும் கேஜிஎப் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை பற்றி பேசியுள்ளார் என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.