விஜய் இடம் ஏற்பட்டிருந்த மன கசப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ள தகவல் வைரல்.

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்தவர்கள் தான் தளபதி விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின். இதில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விஜய்க்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து மனம் திறந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

விஜய்யிடம் ஏற்பட்ட மனக்கசப்பு!!… உதயநிதி பகிர்ந்துள்ள வைரல் தகவல்.!

அதில் அவர், தானும் விஜயும் நல்ல நண்பர்களாக இருந்தபோது தன்னை பற்றி அவரிடமும், அவரைப் பற்றி தன்னிடமும் சிலர் ஏற்றி விட்டதால் மனக்கசப்பு உருவானதாக கூறியிருந்தார். மேலும் அவர் ஒருநாள் விஜய்யை நேரில் சந்தித்து நடந்ததைப் பற்றி பேசியபிறகே விஜய் தன்னை புரிந்து கொண்டதாகவும், அதன் பிறகு இருவரும் மீண்டும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். இவர் மனம் திறந்து பகிர்ந்துள்ள இந்த சுவாரசியமான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.