விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் “கோப்ரா” திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ பதிவாக உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நடிகர்தான் விக்ரம். இவர் நடிப்பில் வெளியான ஐ, கடாரம் கொண்டான் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தற்போது நடித்துள்ள படம்தான் “கோப்ரா”. இந்த படத்தை டி மான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரில்லான படங்களை எடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்திற்கான போஸ்டர்ஸ் மட்டும் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதை தொடர்ந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் திரையரங்கில் வெளியாக போவதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு  அதிகாரப்பூர்வமான தகவலை சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இந்த “கோப்ரா” திரைப்படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு வீடியோ பதிவின் மூலம் படக்குழு தெரிவித்திருந்தது. இதுகுறித்த வீடியோவை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.