ஒரே படத்தில் அண்ணன் தம்பியை இயக்க உள்ளார் இயக்குனர் பாலா என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Udhayanidhi and Arulnidhi in Bala Direction : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. தனித்துவமான படங்களை இயக்கி தனக்கென தனியிடம் பிடித்தவர். இறுதியாக துருவ் விக்ரமை வைத்து பர்மா என்ற படத்தை இயக்கி உள்ளார்.

ஒரே படத்தில் அண்ணன் தம்பியை இயக்கும் பாலா.. இது செட்டாகுமா?? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்.!!

இயக்குனர் பாலா விஷால் ஆர்யா மற்றும் அதர்வா என மூன்று நடிகர்களையும் ஒரே படத்தில் வைத்து இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு வேறு ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் பாலா.

புதிதாக இயக்கவுள்ள படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடைய தம்பி அருள்நிதி ஆகியோரை ஒன்றாக வைத்து படத்தை இயக்க இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. மேலும் இவர்கள் இணைந்து நடிப்பது செட் ஆகுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.