விக்ரம் படத்தை பார்த்த உதயநிதி படம் பற்றி பதிவு செய்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். உலகம் முழுவதும் நாளை மறுநாள் வெளியாக உள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

கமல்ஹாசன் தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் படத்தை தயாரிக்க உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படம் சூப்பர் என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவு உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.