Udhaya vs Vishal
Udhaya vs Vishal

Udhaya vs Vishal – இனி அனைத்து இடங்களிலும் விஷாலை எதிர்க்கும் முடிவில் நடிகர் உதயா இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார். அதற்கு முந்தைய நிர்வாகிகளுக்கு எதிராக போர் கோடி தூக்கியதாலும் பல புதிய திட்டங்களை கொண்டுவருவேன் என வாக்குறுதி கொடுத்ததாலும் பல இளம் தயாரிப்பாளர்கள் விஷால் அணியில் இணைந்து வெற்றிக்காக பாடுபட்டனர்.

அட்லீ கதை திருடியதை ஒப்பு கொள்ள வேண்டும் – கடுமையாக சாடிய தயாரிப்பாளர்.!

இதில் முக்கியமானவர் நடிகர் உதயா.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த உதயா, சங்க செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் கடந்த ஆண்டு சங்க செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

“தலைவரான பிறகு சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களின் நலனுக்காக பாடுபடுவேன் என்றும் பட வெளியீட்டில் ஒழுங்கு முறையை கொண்டுவருவேன் என்றும் விஷால் வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் அவர் சொன்ன எதையும் அவர் இதுவரை செய்யவில்லை. இன்னமும் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் பல சிரமங்களை மேற்கொண்டு வருகிறோம்” என்று தான் விலகியதற்கான காரணத்தையும் உதயா வெளிப்படையாக அறிவித்தார்.

அதேசமயம் தனிப்பட்ட முறையில் விஷாலுக்கும் தனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இனி திரையுலகம் சார்ந்த அனைத்து தேர்தல்களிலும் விஷாலை எதிர்த்து நடிகர் உதயா போட்டியிட முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது ஒருபக்கம் இருக்க தயாரிப்பாளர் சங்கத்தின் மீது எழும் அடுக்கடுக்கான புகார்களைத் தொடர்ந்து இனி தயாரிப்பாளர் சங்கத்தை தமிழக அரசு வழிநடத்தும் என்றும் இதற்காக மத்திய சென்னையின் மாவட்ட பதிவாளர் என்.சேகர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அரசு சார்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விஸ்வாசம், பேட்ட படங்களின் வசூலை முறியடித்த காஞ்சனா 3 – மாஸ் காட்டும் லாரன்ஸ்!

அடுத்த ஓர் ஆண்டிற்கு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும் என்றும் மேலும் ஓர் ஆண்டிற்குள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய தேர்தல் வரும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திரைப்படத் துறை சார்ந்த தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் விஷாலை எதிர்த்து போட்டியிடுவேன் என உதயா கூறியிருப்பதால்,

விரைவில் வரவிருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு எதிராக உதயா களமிறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.