சசிகுமார் ஜோதிகா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான உடன் பிறப்பே திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Udan Pirappe Movie Review : இரா சரவணன் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி, ஆடுகளம் நரேன் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் உடன் பிறப்பே. இன்று இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

மகாபாரதம் வழங்கிய ஆயுதபூஜை.!

படத்தின் கதைக்களம் :

சசிகுமார் அண்ணனாகவும் ஜோதிகா தங்கையாக நடித்துள்ளார். ஜோதிகாவின் 50வது படமான இந்த திரைப்படம் குடும்பப் படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தில் அவர் நடித்துள்ளார். ஜோதிகாவின் கணவராக சமுத்திரகனி நடித்துள்ளார்.

படத்துல இன்னும் காமெடி வச்சு இருக்கலாம் – Aranmanai 3 Public Review | Arya | Sundar c, Raashi Khanna

ஊருக்கு நல்லது சொல்லும் மனிதராக இருக்கும் சமுத்திரகனி அவருடைய மச்சான் சசிகுமார் கட்ட பஞ்சாயத்து, அடிதடி என சுற்றி கொண்டே இருப்பதால் அவருடைய நடவடிக்கை பிடிக்காத சமுத்திரக்கனி சசிகுமார் தன்னுடைய இரட்டை குழந்தைகளில் ஒருவரை இழக்கிறார். இதனால் ஜென்மத்துக்கும் சசிகுமாரிடம் உறவு தேவையில்லை என்று முடிவு செய்கிறார். தன்னுடைய அண்ணனையும் கணவரை சேர்த்து வைக்க இயங்குகிறார் ஜோதிகா. கடைசியில் இவர்களது குடும்பம் எப்படி சேர்ந்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம்.

நடிப்பு :

ஜோதிகா தனது 50வது படமாக இந்த படத்தை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சசிகுமார் ஒரு மகனுக்கு அப்பாவாக நடித்து இருந்தாலும் ஆக்ஷனிலும் கலக்கியுள்ளார்.

சமுத்திரகனி வழக்கம்போல அறிவுரை கூறும் மனிதராக நடித்துள்ளார். இந்த படத்தில் போலீஸ்காரர்களுக்கு அவர் அறிவுரை கூறுகிறார் என்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

இவர்கள் மட்டுமல்லாமல் படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சூரி வழக்கம்போல் கிராமத்து கதையில் தன்னுடைய தனித்துவமான காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி கலக்கியுள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

டி இமான் இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவு :

வேல்ராஜின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

இயக்கம் :

சரவணன் அழகான ஒரு குடும்ப படத்தை உணர்வுப் பூர்வமாக இயற்றியுள்ளார்.

REVIEW OVERVIEW
உடன்பிறப்பே திரைவிமர்சனம்
udan-pirappe-movie-reviewமொத்தத்தில் உடன்பிறப்பே - உருக வைக்கும்