Uchakattam

Uchakattam Review : டி கிரியேஷன் நிறுவனத்தின் மூலமாக தேவராஜ் தயாரிக்க சுனில் குமார் தேசாயி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் இயக்கியுள்ள திரைப்படம் உச்சகட்டம்.

இன்று உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படத்தில் தாகூர் அனோப் சிங், சாய் தன்ஷிகா, தன்யா ஹோப், ஹர்ஷிகா பூணாச்சா, கிஷோர் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு சன்ஜோய் சவுத்ரி இசையமைத்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :

இப்படத்தின் நாயகனாக அனூப் சிங் மற்றும் நாயகியான சாய் தன்ஷிகா ஆகியோரும் காதலித்து வருகின்றனர். இருவரும் நியூ இயர் கொண்டாட்டத்திற்காக பார்ட்டி ஒன்றிற்கு செல்கின்றனர்.

அப்போது நாயகன் தன்னுடைய மொபைலை காணவில்லை என கீழே வருகிறார். தன்ஷிகா பார்ட்டியை வீடியோ எடுத்து கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு ஒரு கொலை நடக்கிறது. அத்தனையும் தன்ஷிகா ரெகார்ட் செய்து விடுகிறார். இது அந்த வில்லன்களுக்கும் தெரிய வர அதன் பின்னர் அவர்கள் தன்ஷிகாவிற்கும் அவரது காதலனுக்கும் என்னவெல்லாம் பிரச்சனை கொடுக்கிறார்கள். அதில் இருந்து இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள். அந்த கொலைக்கான காரணம் என்ன என பல மர்ம முடிச்சுகளை கொண்டது தான் இப்படத்தின் கதைக்களம்.

படத்தின் கதையை பற்றிய அலசல் :

பொதுவாகவே திரில்லர் கதைகளை இயக்குவதில் திறமை படைத்த சுனில் குமார் தேசாயி சிங் இந்த படத்தையும் மிகவும் விறுவிறுப்பாகவும் த்ரில்லராகவும் இயக்கியுள்ளார்.

ஹீரோ அனூப் சிங், சாய் தன்ஷிகா, தன்யா ஹோப் என அனைவரும் நடிப்பும் அட்டகாசம். ரசிகர்களை கவரும் வகையில் படத்தை முழுக்க முழுக்க மர்மங்களுடன் கொண்டு சென்றுள்ளார் சுன்னி தேசாயி.

நடிகர் நடிகைகளின் நடிப்பு :

படத்தின் நாயகன் அனூப் சிங், நாயகி சாய் தன்ஷிகா, வில்லன் கபீர் துஹான் சிங்,தன்யா ஹோப் என பலரும் தங்களுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

சஞ்சய் சௌத்ரி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரு திரில்லர் படத்திற்கு எப்படி இசையமைக்க வேண்டும் என்ற நுணுக்கத்தை நன்கு அறிந்து வைத்துள்ளார் இசையமைப்பாளர். படத்தின் பின்னணி இசை பிரமாதமாக அமைந்துள்ளது.

எடிட்டிங், ஒளிப்பதிவு :

பி.எஸ் கேம்பராஜூ என்பவர் இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள பி.ராஜன், கே.எம் விஷ்ணுவர்த்தன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவிற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தங்களது பணிகளை கச்சிதமாக முடித்து கொடுத்துள்ளனர்.

ஸ்டண்ட் :

வெங்கட் அண்ட் நேபா சுப்பு ஆகியோர் இணைந்து ஸ்டண்ட் பணிகளை மேற்கொண்டுள்ளனர். படத்தில் பெரும்பாலும் சண்டை காட்சிகள் தான் இடம் பெற்றுள்ளன. அப்படியிருந்தும் சற்றும் சலிப்பு ஏற்படாத வகையில் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

இயக்கம் :

சுனில் குமார் தேசாயி படத்தை முழுக்க முழுக்க திரில்லர் படமாக கொண்டு சென்றுள்ளார். திரில்லர் படங்களை இயக்குவதில் நன்கு தேர்ந்த இயக்குனர் என்பதால் இந்த படத்தையும் சிறப்பாக கொண்டு சென்றுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. நடிகர், நடிகைகளின் நடிப்பு
2. திரைக்கதை
3. பின்னணி இசை

தம்ப்ஸ் டவுன் :

வழக்கமாக படங்களில் ஏற்படும் சில லாஜிக்கல் தவறுகள்

REVIEW OVERVIEW
உச்சக்கட்டம் விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
uchakattam-reviewமொத்தத்தில் உச்சக்கட்டம் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றார் போலவே உச்சகட்ட திரில்லர் படமாக அமைந்துள்ளது.