Mega Koottaniyil Uruvana Uchakattam
Mega Koottaniyil Uruvana Uchakattam

Uchakattam Release : டி கிரியேஷன் நிறுவனத்தின் மூலமாக தேவராஜ் தயாரிக்க சுனில் குமார் தேசாயி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் இயக்கியுள்ள திரைப்படம் உச்சகட்டம்.

தாகூர் அனோப் சிங், சாய் தன்ஷிகா, தன்யா ஹோப், ஹர்ஷிகா பூணாச்சா, கிஷோர் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு சன்ஜோய் சவுத்ரி இசையமைத்துள்ளார்.

முழுக்க முழுக்க திரில்லரான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 22-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

பொதுவாகவே திரில்லர் கதைகளை இயக்குவதில் வல்லமை கொண்ட சுனில் குமார் தேசாயி இந்த படத்தை கொலை, காதல், காமம் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாக்கியுள்ளார்.

இந்த படம் சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதியில் மட்டுமே 50-கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாக இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. படத்தின் ட்ரைலர் உள்ளிட்டவை ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.