Uchakattam from Mar 22
Uchakattam from Mar 22

Uchakattam from Mar 22 – மார்ச் 22-ம் தேதி முதல் உச்சக்கட்டம் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டி கிரியேஷன் நிறுவனத்தின் மூலமாக தேவராஜ் தயாரிக்க சுனில் குமார் தேசாயி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் இயக்கியுள்ள திரைப்படம் உச்சகட்டம்.

தகுர் அனோப் சிங், சாய் தன்ஷிகா, தன்யா ஹோப், ஹர்ஷிகா பூணாச்சா, கிஷோர் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு சன்ஜோய் சவுத்ரி இசையமைத்துள்ளார்.

முழுக்க முழுக்க திரில்லரான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 22-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தை ஏ. ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


YouTube video