இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கல்லூரி மாணவர்களுடன் இணைந்து பாடல் பாடி அசத்திய ட்ரெண்டிங் வீடியோ வைரல்.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளர், பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் என்று பல வித்தைகளை கையாண்டு வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான இவர் தனது 16 வயதில், அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து , தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.

மாணவர்களுடன் பாடல் பாடி மகிழ்வித்த U1..! ட்ரெண்டிங் வீடியோ வைரல்!.

தற்போது 15 வருட காலத்திற்குள், யுவன் சங்கர் ராஜா 100 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். பல ரசிகர்களின் மனதை தனது பாடல்கள் மூலம் கவர்ந்துள்ள இவரை ரசிகர்கள் செல்லமாக ‘மன அழுத்த நிபுணர்’ என்று அழைப்பதுண்டு. அந்த அளவிற்கு தனது பாடல்கள் மூலம் மனவலியில் இருப்பவர்களுக்கு மருந்தாக தனது பாடல்களை கொடுத்திருக்கிறார்.

மாணவர்களுடன் பாடல் பாடி மகிழ்வித்த U1..! ட்ரெண்டிங் வீடியோ வைரல்!.

இந்நிலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவன் மாணவர்களின் ஆசைப்படி வல்லவன் திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கும் “லூசு பெண்ணே” என்ற பாடலை அவர்களுடன் இணைந்து பாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.