
புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட போட்டிகள் நடந்து வருகின்றது.
புரோ கபடி லீக்கின் ஒரு பகுதியாக மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா வெற்றி அடைந்தது.
யு மும்பை அணி ஜெய்ப்பூர் அணியுடன் மோதியது.ஆட்டம் தொடங்கிய ஆரம்பம் முதல் யு மும்பையின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
யு மும்பை அணியின் கேப்டன் மற்றும் மற்ற வீரர்கள் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிக்காட்டினர்.
முதல் பாதியில் 26-8 என்ற பெரிய புள்ளி வித்தியாச கணக்கில் யு மும்பை முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் அந்த அணியினுடைய ஆதிக்கம் மட்டுமே தொடர்ந்தது. ஜெய்ப்பூர் அணி 4 முறை ஆல் அவுட்டானது .
இறுதியில் 48-24 என்ற செட் கணக்கில் யு மும்பை வெற்றி பெற்றது. இதன் மூலம் பிரிவு ‘ ஏ ‘ பிரிவின் பிரிவு அணியில் உள்ள யு மும்பை அணி 7 வெற்றிகளுடன் முதல் இடம் பிடித்ததுள்ளது.
மற்றும் ஜெய்ப்பூர் அணி இதுவரை 8 ஆட்டங்களில் பங்குப்பெற்று வெறும் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. இத்துடன் ஜெய்ப்பூர் அணி தர வரிசையில் குறைந்த புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
மற்ற போட்டிகளில் யார் யார் வெற்றி பெறுகிறார்கள் என்றும் தர வரிசையில்எந்த இடம் பிடிக்கின்றது என்று பின்தொடரும் போட்டிகளில் தெரிய வரும்.