விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் 2 முக்கிய காட்சிகள் நிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜயின் நடித்துள்ல பிகில் திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து 2 முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் எடிட்டர் ரூபன் கூறியுள்ளார்.

ஒரு காட்சியில் ஒரு அரசியல்வாதி மக்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருப்பார். அங்கு வரும் விஜய் அவரை கிண்டலடித்து விட்டு மக்களிடமிருந்து அந்த பணத்தை வாங்கி அவரிடமே திருப்பிக் கொடுப்பார். இந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். அரசியல்வாதிகளை விமர்சித்து தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்க வேண்டாம் என்பதற்காக இக்காட்சி நீக்கப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது.

மேலும், விஜய் நகைச்சுவையுடன் நயன்தாராவுடன் காதல் செய்யும் ரொமான்ஸ் காட்சி ஒன்று அசத்தலாக இருந்தது. ஆனால், படத்தின் இயக்குனர் அட்லீ கூறிவிட்டதால் அந்த காட்சியையும் நீக்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.