Two happy moments Dhoni
Two happy moments Dhoni

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் தோனி. இந்தியாவுக்கு மூன்று ஐசிசி டிராபியை வாங்கிக் கொடுத்தவர். இவரது தலைமையில் இந்திய அணி, 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி பெற்றது.

தோனியால் இந்திய அணியில் ஏராளமான சிறந்த சம்பவங்கள் நடந்திருக்கும். ஆனால் இந்த இரண்டு விஷயங்கள்தான் மிகமிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார் தோனி.

தென்ஆப்பிரிக்காவில் 2007-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வென்று இந்தியா திரும்பியபோது, மும்பையில் உள்ள மரைன் டிரைவில் நாங்கள் திறந்த வெளி பேருந்தில் உலா வந்தோம். அப்போது அந்த பகுதியே ஸ்தம்பித்தது. காரில் இருந்து பொதுமக்கள் காரை விட்டு வெளியில் இறங்கி நின்றனர்.

ஒவ்வொரு பொதுமக்களின் முகத்திலும் சிரிப்பை பார்த்த நான், அதை மிகவும் சிறந்த தருணமாக உணர்ந்தேன்.

2-வது நிகழ்வு 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியின்போது நடந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 15-20 ரன்கள் தேவையிருக்கும்போது, அனைத்து ரசிகர்களுமம் வந்தே மாதரம் என கோசம் எழுப்பினர்.

இந்த இரண்டு தருணங்கள் மீண்டும் பிரதிபலிப்பது மிகவும் கடினம். இரண்டு எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான தருணங்கள்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here